அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர்,, தா.பழூர் ஆகிய சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.
இதில்
மாவட்டத்தில் அதிகப்படியாக செந்துறை பகுதியில் 6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரியலூரில் 31.5 mm, திருமானூரில் 8.4 mm, ஜெயங்கொண்டத்தில் 34 mm, செந்துறையில் 60 mm, ஆண்டிமடத்தில் 17.6 mm, சுத்தமல்லி அணைக்கட்டில் 30 mm, குருவாடியில்
8.5 mm, தா.பலூரில்
11mm, மொத்தமாக மாவட்டம் முழுவதும் 201 mm மழை பதிவாகியுள்ளது. ஒரு நாள் சராசரியாக மாவட்டத்தில்
25.13 mm பதிவாகியுள்ளது.
டிசம்பர் பாதத்தில் சராசரி மழையளவான 160.8 mm ல், இன்று ஒரே நாளில்
25.13 mm மழை பெய்துள்ளதசெந்துறையில் இருந்து ஆர்எஸ் மாத்தூர் செல்லும் சாலையில் பெரியாக்குறிச்சியில் கிராமத்தில் மரம் வேரோடு சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை பொது மக்கள் சில கிளைகளை வெட்டி தற்காலிகமாக போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் ஆர் எஸ் மாத்தூர் அருகே உள்ள இருங்களாகுறிச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையினால் வடிகால் பகுதியில் உள்ள நெல் நடவு செய்த தாழ்வான பகுதியில் பயிர் நீரில் மூழ்கியது. இந்த நீர் மழை விட்ட சில மணி நேரங்களில் வடிந்துவிடும் என கூறப்படுகின்றது.