அரியலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 17 ஆம் ஆண்டு மண்டலாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது.
இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு கொட்டும் மழையில் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம், நெய் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் அலங்காரம் செய்யபட்டு ஆராதனை காட்டபட்டது. இதனையடுத்து கன்னிபூஜை நடைப்பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.