Skip to content
Home » தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியபோது 20ஆம் தேதியே மீனவர்கள் 11 நாட்களாக கடலுக்கு செல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் நேற்று பெஞ்சல் புயல் சின்னம் உருவாகி இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.

இச்சம்பம் அறிந்த பொறையார் காவல் நிலைய போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது கோட்டைக்கு செல்லும் பிரதான முகப்பு வாயில் முன்பு பேரி கார்டுகளை வைத்து பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *