Skip to content
Home » திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சிஇ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் . அதனைத் தொடர்ந்து அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நல பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது நிகழ்வில் மண்டலம் – நன் தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர் தசரதன் தங்கலட்சுமி

பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் பள்ளியின் செயலர் ராகவன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
இந்தியாவிலேயே இன்றைய தினம் நாட்டு நல பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு. மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சக மாணவர் தனது நண்பர்கள் கேட்கும் பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களை விளக்கி அவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்ய உதவ வேண்டும் நம் முதல்வர் கூறுவது போன்று மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவன செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *