கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உத்திர பிரதேசத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய உ.பி காவல்துறை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் அபுதாஹிர்,
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சம்பா பகுதியில் உள்ள மசூதிக்காக நீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு கொடுக்கப்பட்டு அதற்கு அன்று தீர்ப்பு வழங்கி அடுத்த நாள் நீதிமன்றம் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்ற போது அங்கு 1000-க்கும் மேற்பட்ட கும்பல்கள் உள்ளே நுழைந்து சட்ட விரோதமாக செயல்பட்டனர்.
அதனை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது உத்திர பிரதேச காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டனர்.எனவே உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு இந்த செயலில் ஈடுபட்டதாகவும் இதற்கு நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.