Skip to content
Home » அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

  • by Authour

தமிழக அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் போலீசார முதல் இன்ஸ்பெக்டர் வரையில் ஸ்மாட் கார்டு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி மாநிலம் முழுவதும் 3,191 இன்ஸ்பெக்டர்கள், 8,245 எஸ்ஐக்கள், 1,13,251 எஸ்எஸ்ஐக்கள், போலீசார் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. போலீசாருக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது. சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மார்ட் கார்டு மூலம் போலீசார் பயணிக்கலாம். வாரன்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீசார மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களை கண்டறிந்து டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர போலீஸ் கமிஷனரகள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸார், ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் டிஜிபி கூறியுள்ளார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *