திருச்சி தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்புகார் மனுவில் கூறியதாவது.. எஸ் டி பி ஐ கட்சி சார்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேல்முருகன் எம் எல் ஏ மற்றும் எஸ்டிபிஐ கட்சி தலைவர்களையும் பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம்
அவதூறாக தகவல் பரப்பி வருகிறார். தமிழக மக்களிடையே மத பிரிவினையை தூண்ட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு செயல்படும் இப்ராஹிம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது… மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செயலாளர்கள் மதர் ஒய் ஜமால் தளபதி அப்பாஸ் மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இமாம் ஷாகுல் ஹமீது மற்றும் பொன் நகர் ரபிக் ஆகியோர் உடன் இருந்தனர்.