திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். இன்று காலை அந்த தோட்டத்து வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது தெய்வசிகாமணி உள்பட 3 பேரும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டில் கொள்ளையும் நடந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து 3 பேரையும் கொலை செய்து விட்டு கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. செந்தில் குமார் கோவையில் வசித்து வந்தவர் சொந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்தவர் பெற்றோருடன் தங்கி இருந்தார். இதனால் அவரும் கொலை செய்யப்பட்டு உள்ளார். முன் விரோதத்தால் இந்த கொலை நடந்ததா அல்லது பணம், நகைக்காக கொலை நடந்ததா என தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் திருப்பூர் எஸ்.பி, பல்லடம் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்ற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.