Skip to content

சர்வதேச சாரண இயக்க முகாம்…..ஜனவரியில், மணப்பாறையில் நடக்கிறது

  • by Authour

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழாவையொட்டி,   சர்வதேச  சாரணர் முகாம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு

நினைவு பெருந்திரளணி  முகாம்  வரும்  ஜனவரி  மாதம்  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடக்க இருக்கிறது.  இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சாரணர்கள் கலந்து கொள்கிறார்கள்.   7 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது.   20 ஆயிரம் சாரண, சாரணியர் பங்கேற்கிறார்கள். அவர்கள்  அங்கு கூடாரம் அமைத்து தங்குகிறார்கள் .

இந்த முகாமின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கான விழாக்குழு தலைவராக  துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினும்,  துணைத்தலைவராக  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியும்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முகாம் முன்னேற்பாடு பணிகளை  அமைச்சர் மகேஸ்  இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  ஆய்வு செய்தார்.  ஏற்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரைபடத்துடன்  அமைச்சருக்கு விளக்கினார்.  இந்த நிகழ்வில்   எம்எல்ஏகள்  பழனியாண்டி,  அப்துல் சமது,  சாரண இயக்க முதன்மை ஆணையர் அறிவொளி ஆகியோரும்  கலந்துகொண்டார்கள்.

 

ரவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!