மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த சிறுமி, தன்னை அபிநாத் நவ.25-ஆம் தேதி கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்தார். இப்புகார் குறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தி, அவரது வாக்குமுலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அபிநாத் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அபிநாத் நேற்று இரவுசிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் துன்புறுத்தலில் அபிநாத் ஈடுபட அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் 5 பேரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.