Skip to content
Home » மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார், ராதா நல்லூர், கிடங்கல், கேசிங்கன் உள்ளிட்ட மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்கள் உட்பட மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குறைந்த நாள் பயிர் மற்றும் பள்ளப்பகுதிகளில் 8000 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில்
தண்ணீர் வடிய வழியின்றி நீரால் சூழப்பட்டது. ஒரு சில பகுதிகளில் வடிகால் வாய்க்கால் தூர்வாராததாலும் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாலும் தண்ணீர் வடிய வழியின்றி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 8151ஏக்கர் சம்பா பயிர்கள் நீரால் சூழ்ந்துள்ளதாக  வேளாண்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.  மழை மேலும் நீடித்தால் இந்த பயிர்கள்  அழுகும் ஆபத்து உள்ளதாக  விவசாயிகள்  தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!