காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 1 வாரத்திற்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று திடீரென அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று இளங்கோவனை பார்த்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, இளங்கோவனுக்கு ஏற்கனவே பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் 1 வாரத்திற்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவரது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வரும் 9ம் தேதி மசட்டமன்ற கூட்டம் கூடுகிறது. சட்டமன்றத்திற்கு அவர் வருவார். அவரதுகுரலை கேட்ட ஆவலுடன் இருக்கிறோம்’ என்றார்.