புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி நிமித்தமாக டூவீலரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் டூவீலரில் மோதியது. இதில் விமலா அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுபற்றிய செய்த அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், விமலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் விமலாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறி யிருப்பதுடன் குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார். அத்துடன் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்து உள்ளார்.
விபத்தில் இறந்த விமலாவின் கணவர் பெயர் மணிகண்டன். அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.