திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கிடங்கில் டேங்கர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்! பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் திருவெறும்பூர் நவ 28
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கிடங்கில் மொழி தெரியாதவர்களை வைத்துக்கொண்டு டேங்கர் லாரி ஓட்டி வரும் இளைஞர்களை அவமரியாதையாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் டிரைவர்கள் கிளீனர்கள் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு இயங்கி வருகிறது.
சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல் ,டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, , காரைக்கால், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 200 முதல் 250 லாரிகளில் லோடு எடுத்து செல்லப்படும்.
இந்நிலையில் இங்கு ஓட்டுநர் மற்றும் கிளீனர்கள் திடீரென இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து டிரைவர், கிளீனர்கள் கூறியதாவது:
ஓட்டுனர் மட்டும் நடத்துனர் லோடு பிடிக்க ஐ ஒ சி எல் அடையாள அட்டையை வைத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
டீலர் வண்டிகள் காலையில் லோடு பிடிப்பதற்கு அனுமதிக்கவும்
மதியம் உணவு இடைவேளை இல்லாமல் தொடர்ந்து லோடு பிடிக்க அனுமதிக்கவும்
இ-பாஸ் காலதாமதம் ஆகாமல் அடித்துக் கொடுக்க வேண்டும்
லோடு இறங்காத பங்க்கு லோடு போடுவதை தவிர்க்கவும் லோடு பில்லிங் ஸ்லிப்பில் உள்ள நேர கட்டுப்பாட்டை தவிர்க்கவும்
அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை சரி செய்யவும்
ஏசி கே பெயிண்டிங் செய்யும் பங்கிற்கு லோடு கொடுப்பதை தவிர்க்கவும்
முதல் நாள் மது அருந்தி இருப்பது கருவி மூலம் கண்டறியப்பட்டால் மூன்று நாள் பணி நீக்கம் செய்யவும்
மொழி தெரியாதவர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் வேலையில் அமர்த்தி உள்ளதால் அவர்கள் லாரி டிரைவர் மற்றும் கிளீனர்களை அவமரியாதை செய்கின்றனர். ஆகவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டம் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.