தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், அருளானந்தம்மாள் நகர் அங்கீகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மேயர், அந்த பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் அது குறித்து இங்கு விவாதிக்க முடியாது என்றார். இந்த பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அடுத்ததாக தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணத்தை குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 என உள்ள கட்டணத்தை, ரூ. 20 ரூ.10 என குறைக்க முடிவு செய்யப்பட்டது.