தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக கலெக்டர் அலுவலக வளாகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையிலும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.