அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக திருத்திய நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து நாள் கூலி 600ரூ ஆக உயர்த்திட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக சட்டப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கல்வியை காவியமாக்க கூடாது. நாட்டில் மத கலவரத்தை தூண்ட கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கிடு உள்ளிட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத, போக்குகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது.
அரியலூரில் அண்ணா சிலை அருகில் கொட்டும் மழையிலும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் த.தண்டபாணி, தொமுச மாவட்ட செயலாளர் ரெ. மகேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் P.துரைசாமி, INTUC மாவட்ட தலைவர் D.விஜயகுமார்,HMS மாவட்ட செயலாளர் S. இராமசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி R.தனசிங் அரியலூர் நகராட்சி ரெ.நல்லுசாமி செ.மாரியப்பன், பெ. மணிகண்டன், ஜெயங்கொண்டம் நகராட்சி N.சுரேஷ், காந்தி,முனியம்மாள், லதா, பார்வதி திருமானூர் G.ஆறுமுகம், இளையராஜா, மகளிர் குழு மா. நல்லம்மாள், கிராம ஊராட்சி R.மருதமுத்து, பழனியாண்டி,ரேவதி, தூய்மைக் காவலர் சாந்தி, பானுமதி, முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்கம் S. ஆனந்தன், சு.கவர்னர் மற்றும் சிஐடியு R. சிற்றம்பலம், க. கிருஷ்ணன், தொமுச திருஞானசம்மந்தம், சங்கர், ராமசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.