தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் விலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறுகையில்….
தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் உடன் பொருந்திய ஐந்து போட்டுகள், 15க்கும் மேற்பட்ட மரம் அறுக்கும் இயந்திரங்கள், போதுமான அளவு கயிறுகள், 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகள், கோபுர விளக்கு பொருத்தப்பட்ட வாகனம் என அனைத்து பொருட்களும் தயாராக உள்ளது. அதேபோல் தீயணைப்பு துறை வீரர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதா வேறு மாவட்டங்களில் இருந்து பேரிடர் குழு வரவில்லை. எனவே பொதுமக்கள் தஞ்சை தீயணைப்பு துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என்று இவ்வாறு அவர் கூறினார்.