Skip to content
Home » கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்பு பாமக வழக்கறிஞர்கள் கருப்பு பலூனூடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய தமிழக முதல்வர், இவ்வாறு பேசுவது முறையல்ல. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து டாக்டர் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோசமிட்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்கறிஞர்களை அரியலூர் காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!