Skip to content
Home » முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,
அரியலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,
அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்து அரியலூர் அருகே கொல்லாபுரம் இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,
அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில், தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில், 101.50 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து விழா மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவிட்டார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் தலைமையில், அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள்  சங்கத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், செயலாளர் முத்துக்குமரன், அரசு வழக்கறிஞர்கள் கதிரவன், சின்னத்தம்பி, தேவேந்திரன், ராஜா, பாலா, கணேசன், மூத்த வழக்கறிஞர்கள் மணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முதல் வரி சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!