தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் 213 இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அன்பு கரங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு
காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பசுபதிபாளையம் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி சேலை சட்டை, மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.