தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது . நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் 12 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகி விடும் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து இலங்கையை நோக்கி செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டுகிறது.