Skip to content
Home » இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

  • by Senthil

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்றுள்​ளது. இது, தென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் இலங்கை – திரி​கோணமலை​யி​லிருந்து தென்​கிழக்கே சுமார் 310 கிமீ தொலை​விலும், நாகப்​பட்​டினத்​திலிருந்து தெற்கு தென்​கிழக்கே 590 கிமீ தொலை​விலும், புதுச்​சேரியி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 710 கிமீ தொலை​விலும், சென்னையி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 800 கிமீ தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது. நல்ல மேக கூட்​டங்கள் உருவாகி​யுள்​ளது. இந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டல​மானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை​யில் நகர்ந்து இன்று புயலாக வலுப்​பெறக் கூடும். இந்த புயலுக்கு பெங்கல் (fengal) என பெயரிடப்பட்டுள்ளது. பெங்கல் புயல் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழக கடலோர பகுதி​களில் மழை தொடரும். அதன்​படி, தமிழகத்​தில் இன்று அநேக இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், அரியலூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது. சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நாளை கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, கடலூர் மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது. சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்றும் ராணிப்​பேட்டை மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நவ.29-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!