வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை 11 மணி முதல் அடைமழை போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து குழந்தைகளை பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.