கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை சேடல் டேம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரின் மனைவி முனீச்செல்வி(35) . இவர்களுடைய மகன் சஜித்(7). முனீஸ்செல்வி நேற்று ஆற்றுப்பகுதியில் துணிகளை அருகில் உள்ள ஆற்றில் சலவை செய்வதற்கு சென்ற போது தன்னுடைய மகன் சஜூத் அருகில் உள்ள தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்து சஜித் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முனீச் செல்வியும் ஆற்று தண்ணீரில் இறங்கியதால் இருவரையும் தண்ணீரில் இழுத்துச் சென்று அரை மணி நேரம் ஆகி துணிகள் மட்டும் கரையில் இருந்ததை அறிந்த பொதுமக்கள் தேடிப் பார்த்தபோது முனீச்செல்வி தண்ணீரில் மூழ்கி இறந்து மிதந்துள்ளார். அவருடன் சென்ற மகனைத் தேடிப் பார்த்தபோது அவரும் தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நகரட்ச்சி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு அங்குள்ள இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி இரண்டு உடல்களையும் மீட்டனர் . உடனடியாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி பிரேதத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.