கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் டபுள் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த நபர் மருந்து வாங்க வந்தது போல் தனியாக இருந்த பொண்ணிடம் செயினை பறிக்க முற்பட்டார்.
அப்போது அந்த பெண் சாமார்த்தியமாக பின்நோக்கி நகர்ந்ததால் செயின் அறுந்த நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் செயின் தப்பியது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நரிக்கட்டியூர் தமிழ் நகரை சார்ந்த விஜயா என்பவர் மருந்துக்கடை காந்தி கிராமத்தில் தாமரை மெடிக்கல் எனும் பெயரில் நடத்தி வருவதாகவும், 23ம் தேதி இரவு 11 மணியளவில் மருந்துகடைக்கு வந்த கடவூர் வட்டம், வீரணம்பட்டி காலனி தெருவை சேர்ந்த ரஞ்சித் என்ற 28 வயது இளைஞர் இந்த செயின் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தாந்தோன்றிமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.
செயின் பறிக்க முயன்றவர்கள் வீரணம்பட்டியை சார்ந்த ரஞ்சித் குமார், கோவை மாவட்டம் வால்பாறையை சார்ந்த சக்திவேல் என்பதும், தற்போது தெற்கு காந்தி கிராமம், சக்தி நகரில் வசித்து வருவதும் தெரிந்த தனிப்படை போலீசார் சென்ற போது இரு சக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் துரத்தினர். அப்போது அவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.