திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில்
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (வயது 64) என்பவரை கைது செய்தார் .தில்லை நகர் போலீசார் ஆழ்வார் தோப்பு பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளுடன் தென்னூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சாமத் (62 )என்பவரையும் ,உறையூர் போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக திருச்சி புத்தூர் வடக்கு எடத்தெருபகுதியைச் சேர்ந்த அருணகிரி (53)என்பவரையும் கைது செய்தனர்.
டிரான்ஸ்பார்மரிலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர்… தீவிர சிகிச்சை….
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ராஜாளிப்பட்டி கோட்டைக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவர் திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கேங்மேனாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து அவரது தந்தை வெள்ளைச்சாமி கண்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது…. பணம் பறிமுதல்…
திருச்சி உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜன்மற்றும் போலீசார் சோளகம்பாறை அம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் ஊசிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரிடம் இருந்து 20 மாத்திரைகள், 5 ஊசிகள் ரூபாய் 600 ஆகியவற்றை கைப்பற்றி அந்த வாலிபரை கைது செய்தனர். கைதானவர் உறையூர் காவல் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் (வயது 18) என்பது தெரிய வந்தது.அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.