Skip to content
Home » தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

  • by Senthil

திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில் அமைந்துள்ள நடைபெற்றது . இவ்விழாவில் 24 வது வார்டு கவுன்சிலர் சோபியா விமலா ராணி, தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் முதன்மை துணைத்தலைவர் பொறியாளர். பேட்ரிக் ராஜ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிருக்கு பரிசுப்பொருட்களும் ஊக்கத்தொகையும் அளித்து பாராட்டு தெரித்தனர் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட டேக்வான்டோ பயிற்சி தலைவர் துரைராஜ் , மாவட்ட துணைத்தலைவர் ராஜன் ஆகியோரின் விண்ணப்பத்தை ஏற்று காங்கிரஸ் சிறுபான்மை துறை முதன்மை துணைத்தலைவர் பொறியாளர். பேட்ரிக் ராஜ்குமார் அவர்கள் 25000 ரூபாய் மதிப்பிலான பிள்ளைகளின் பயிற்சித்தரத்தை மேம்படுத்தக்கூடிய நவீனகருவியை வாங்கித்தருவதாக அறிவித்தார் . இந்நிகழ்சிக்கு 24 வது வார்டு காங்கிரஸ் தலைவர் பட்டறை கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார் , புத்தூர் கோட்டத்தலைவர் மலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார் , வார்டு துணைத்தலைவர்கள் கேபிள் முரளி மற்றும் பிரகாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!