Skip to content
Home » திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Senthil

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 1கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஓருவருக்கு அரசு பணியும் வழங்கிட தேசிய நெடுஞ்சாலை துறையும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு திருவெறும்பூர்  ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் முடிவு ஏட்டப்படாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்கறிஞர் கலைச்செல்வன்,
நிர்வாகிகள் குணா, நகராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்குமார்
பேச்சு வார்த்தை நடத்தினர்.
திடீர் சாலை மறியல் காரணமாக திருச்சி -தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!