இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் கோவை குனியமுத்தூர் காளவாய் பகுதியில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அகமது குட்டி உண்ணிக்குளம், மாநில தலைவர் கானகத்து மீரான், தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் கபூர், செயலாளர் சாகுல் அமீது, வடக்கு மாவட்ட தலைவர் அயூப், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் கூறுகையில், தொழிலாளர்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 30-ஆம் தேதி 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அவரிடம் கோரிக்கை அளித்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதனை நிறைவேற்ற வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார். மேலும், சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் டிசம்பர் மாதம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மதுரை, தஞ்சையில் மண்டல கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் இதன் பின் மாநில மாநாடு மே 1-ம் தேதி நடக்கிறது என்றும் இதில், தேசிய தலைவர்கள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்