Skip to content
Home » காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் உதயபிரகாஷ் ( 23) .இவர்  ஒரு  நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனை வசூலிக்கும்  வேலை செய்து வந்தார்.

உதயபிரகாசுக்கும்  வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமாவும் (21)  காதலித்து  வந்தனர்.  ஹேமா குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  எதிர்ப்பை மீறி இவர்கள்  2 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

உதயபிரகாஷ் தனது  காதல் மனைவி ஹேமாவுடன், சித்தி ராஜேஸ்வரியின் வீடான ஆட்டுர் தோப்பு தெரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் ஒரே அறையில் தூங்கிய நிலையில், அதிகாலையில் உதயபிரகாஷ் எழுந்து பார்த்தபோது மனைவி ஹேமா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்து அனைவரும் ஹேமாவை மீட்டு அழுது கொண்டிருந்த நேரத்தில், ஹேமா தூக்கில் தொங்கிய அதே கயிற்றை எடுத்துச் சென்று உதயபிரகாஷ் அருகில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி டிஎஸ்பிபாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, மற்றும் போலீஸார், உதயபிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை கைப்பற்றி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!