Skip to content
Home » கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Senthil

கோயமுத்தூர் விழா  கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி வரைஇந்த விழா  நடைபெறுகிறது.கோயமுத்தூர் விழா  நடைபெற்று வரும் நிலையில் டபுள் டக்கர் பேருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக  கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை விழாவின்  ஒரு பகுதியாக கோவையின் கலாசாரத்தை கொண்டாடும் வகையிலும் கோவை மாவட்டத்தின்  220 வது ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாகவும் விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இதில் கிராஸ் கட் சாலை துவக்கத்திலிருந்து முடியும் வரை பாரம்பரிய கலைகள் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன கலைகள், தற்காப்பு கலைகள் உட்பட பஞ்சாப், குஜராத்தி மக்களும் பங்கேற்று அவர்களது பாரம்பரிய கலையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக இந்த விழாவில்   அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை உரையாற்றி பேசியதாவது:

17 ஆண்டுகளாக ஒரு விழா சிறப்பாக நடைபெறுகிறது என்றால் அது கோவை விழா தான் . சில விழாக்கள் துவங்கி பாதியிலேயே கைவிடப்பட்டு விடும் .
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. தொழில்துறையில் வந்தவர்களை  கோவை வாழ வைத்துள்ளது, தொழில் தேடி வந்தவர்களையும் வாழ வைத்துள்ளது. அண்மையில் கோவைக்கு வந்த முதலமைச்சர் 200 கோடி ரூபாயை சாலை சீரமைப்பிற்காக வழங்கி உள்ளார். விரைவில் கோவைக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் வகையில் ஏழு மாடி கட்டிடமாக பெரியார் நூலாகம் அமைய உள்ளது . மேலும் கோவைக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர்  அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஹாக்கி மைதானத்திற்காக துணை முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.  விரைவில் கோவையில் உலகத்  தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் வரவுள்ளது.  கோவையின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. மருத்துவத்தின் தலைநகராக கோவை திகழ்ந்து கொண்டிருக்கிறது.  இன்னும் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் இந்த அரசு செய்யும் .

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,  மேயர் ரங்கநாயகி, துணை மேயர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!