Skip to content
Home » டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33). அவரது மனைவி அமுலு (27 ). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு நேற்று காலை வீட்டில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டியுள்ளனர். அப்போது, குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தை வெங்கடலட்சுமியை  சிகிச்சைக்காக செங்குன்றம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் ஜி.எச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!