கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணை 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2019 நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2020, 2021ல் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால், பாசனத்-துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 15 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த காரணத்தினால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியது.
மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணை கடந்த வாரம் நிரம்பியது. உபரிநீர் அணையில் இருந்து, வாய்க்காலில் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அணையிலிருந்து உபரி நீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றி வருகின்றனர். ஆத்துப்பாளையம் அணை மூலம், க.பரமத்தி, மண்மங்கலம், புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில், 19,480
ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 80 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது வாய்க்காலில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது அதேபோல் கடல்போல் காட்சியளிக்கும் ஆத்துப்பாளையம் அணை கழுகு பார்வை காட்சி. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்