ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இன்று காலை வரை ஆடி 104 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால், கே. எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடத் தொடங்கினர். இந்த போட்டியில் இந்திய அணி ஒரு புதிய சாதனை படைத்து உள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் 38 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்த சாதனையை படைத்த 4-வது இந்திய ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளனர். இன்றைய ஆட்ட நேர முடிவு வரை இந்திய அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி172 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 90, ராகல் 62 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.