திருச்சியில் உள்ள பழமையான சிவாலயங்களில் முக்கியமானது உறையூர் காந்திமதி அம்மன் சமேத பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.19 ஆண்டுகள் நிறைவுற்ற இக்கோயிலில் முழுமையாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பணிகள் துவங்குவதற்காக இக்கோயிலில்யில், பாலாலய பூஜைகள்
நடைபெறுகின்றன. நேற்று மாலைமுதல் நாளான மாலை பூர்வாங்க பூஜைகள்
மற்றும் ஹோமங்கள் நடந் தன. இன்று காலை 2ம் கால யாகசாலை நடந்த பின், கோயில் விமானங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது பாலாலய விழா ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் அறிவுறுத்தலின்படி துணை ஆணையர் ஞானசேகரன்,செயல் அலுவலர் புனிதா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்..