திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தமிழ்செல்வன் அடிக்கடி ஹரிணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகனை தனது வீட்டில் இருந்து தமிழ்ச்செல்வன் வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து ஹரிணி தந்தை மீனாட்சி சுந்தரம் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 21 ந்தேதி மாமனார் மீனாட்சி சுந்தரத்திடம் தகராறு செய்த தமிழ்ச்செல்வன், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மீனாட்சி சுந்தரம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து மீனாட்சி சுந்தரம் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து அவர் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.