பீகார் மாநிலத்தில் தராரி, ராம்கர், பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சியான ஜன் சூராஜ்( மக்கள் நல்லாட்சி) கட்சி சார்பில் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
4 தொகுதிகளிலும் அவரது கட்சி பின்தங்கி உள்ளன. மற்ற கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் அமைத்து கொடுத்தவர்.
தன் கட்சிக்கு வியூகம் அமைக்க தவறி விட்டார் என்று பீகார் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்ததாக மேற்கண்ட 4 தொகுதிகளிலும் பாஜக, ஆர்ஜேடி, பிஎஸ்பி,ஐக்கியஜனதா தளம் என ஒவ்வொரு கட்சியும் ஒரு இடத்தில் முன்னணியில் உள்ளது.
பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வந்தார்.ஆனால் அவர் கட்சி 4 இடங்களிலும் பின்தங்கி உள்ளது.