காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கடந்த வாரம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டில்லி சென்ற அவரை வழியனுப்ப காங்கிரசார் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி செல்வத்தை கடுமையாக ஆபாசமான வார்த்தையில் திட்டினார். இருவருக்கும் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த சண்டை சமூகவலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாகஐ.என்.டி.யு.சி நிர்வாகி செல்வம் கட்சி மேலிடத்திலும், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில் கோவை பீளமேடு போலீசார் மயூரா ஜெயக்குமார் மீது
பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.