நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி கொண்ட அக்கட்சியினர், தொடர்ந்து தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். சீமான் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள் விலகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட வடக்கு செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 20 பேர், தங்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கோவை ஆடீஸ் விதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்… ஒட்டு மொத்தமாக சீமான் மீது அதிருப்தியாக இருக்கிறோம்.20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறிகிறோம். மக்கள் அண்ணியமாக பார்க்கிறார்கள்.சீமான னின் பேச்சு முன்னுக்கு பின்னாக இருக்கின்றது.
இனிஎந்த கடையில் இணைய போகின்றோம் என இன்னும் முடிவு செய்யவில்லை.கட்சியை விட்டு வெளியேறுவது சீமானுக்கு தெரியாது.அவரிடம் தெரிவிக்கவில்லை.சீமான் அவர்களை நாங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை. கட்சியை கடந்து நண்பர்களாக பயணிக்க ஆசை படுகிறோம். கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை.நாம் தமிழர் இரண்டாவது கட்சியாக பிரிய வாய்ப்பு இல்லை. திமுக வலிமையான கட்டமைப்பு இருக்கிறார்கள், அதிமுக , திமுக கட்சி கட்டமைப்பு நன்றாக உள்ளது.