ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்யவேண்டும், மேலும் கூட்டுக்குடிநீர் திட்டபணிகளுக்காக காவிரி
ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதை தடைசெய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை வழங்கிய நிலையில், ஒப்பந்த நிறுவனம் மணல் திருடியது உறுதிசெய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.