திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலில், முள் செடிகள் அடர்ந்த பகுதியில் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.