சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நவ.,25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நவ.,26, 27ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.