திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கரில் தென்னை நாற்றங்கால் உள்ளது. இதன் உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கம் பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார்.
கடந்த 2021 ம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரெங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக கையொப்பமிட்டு ஆவணங்கள் தயாரித்து தேவராஜன் என்பவருக்கு 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டு உள்ளார். அதற்கு முன்பணமாக 5 கோடி ரூபாய் கோவிந்தன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இடத்தையும் இவரால் பதிவு செய்து தர முடியாத நிலையில் தேவராஜன் போலீசில் புகார் அளித்தார்.
திருச்சி மாநகர குற்ற பிரிவு போலீசார் கோவிந்தனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.