மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, டில்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி புச் மீது விசாரணை நடத்த வேண்டும். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவது காங்கிரசின் கடமை.
முறைகேடு வழக்குகளில் நாட்டின்முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்? எதிர்க்கட்சி தலைவராக நான் மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்புவேன். இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார். அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்படமாட்டார். ஏனென்றால் அரசு அவரை காக்கிறது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பிரதமர்மோடியும், அதானியும் ஒன்றாக இருந்தால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்கள். அதானி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளார் என்பது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மூலம் தெளிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.