திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது . அபிநயா தற்போது 4 மாத கா்ப்பமாக இருக்கிறார். பாலமுத்துவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனை அபிநயா கண்டித்து உள்ளார். ஆனாலும் பாலமுத்து குடியை விடவில்லை. எனவே அபிநயா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பாலமுத்து மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி அபிநயாவை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்பொழுது அங்கு பாலமுத்துவிற்கும் அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாலமுத்து மதுபோதையில் கிழக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவனின் உடலை பார்த்து கர்ப்பிணி மனைவி கதறினார்.
பாலமுருகன் குடும்பத்தினர் பாலமுத்துவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பாலமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.