கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தரப்பட்டது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் புகை மண்டலமானது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பானுமதி(50), ராஜேஷ்வரன் (52) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் பத்மாவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
