அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட இடங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்கிட கேட்டும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முகமது அலி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் உயர்த்தியும், பசும்பால் ரூபாய் 45 ம், எருமை பால் லிட்டருக்கு 54 ம் நிர்ணயம் செய்ய வேண்டும். பாலுக்கான ஊக்கத்தொகை இதர மாநிலங்களில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5 தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.