Skip to content

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:

வருகின்ற 23-ந் தேதி (சனிக்கிழமை)  திருச்சிக்கு வருகை தரும் துணை முதலமைச்சரும் ,கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கழக முதன்மை செயலாளர் கே.என் நேரு தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழகத்தினர் அனைவரும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது.
துறையூரில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிப்பது.

வருகின்ற  27-ந்தேதி அன்று பிறந்தநாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது,
தி.மு.க கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிற்பிற்கிணங்க வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு அயராது பாடுபடுவது  உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன்,எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி,
மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம்,முன்னாள் மத்திய மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா ,காஜாமலை விஜய், ராம்குமார்,இளங்கோ,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம்,புத்தூர் தர்மராஜ்,தொழிலதிபர் ஜான்சன் குமார், தில்லைநகர் கண்ணன்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,அயலக அணி திருச்சி மாநகர அமைப்பாளர் துபேல் அகமது,மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி,
வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி, புஷ்பராஜ் ,மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ்,நிர்வாகிகள் அரவானூர் தர்மராஜன் பந்தல் ராமு,சர்ச்சில் ரியல் எஸ்டேட் நடராஜன் ,மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!