Skip to content
Home » திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

  • by Senthil

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். .சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, 2015ம் ஆண்டு முதல் மதுரையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்கண்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பனாவை தவிர மற்றவர்களை மதுரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

கொலை செய்யப்பட்ட வழக்கறிஞா் காமராஜின் மாமனார் தலித் எழில்மலை திருச்சியில்(2001 இடைத்தேர்தல்) மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!